
பொதுவாகவே தவறாக புரிந்துகொள்வோர் நம்மில் நிறையவே உண்டு,அதுவும் தவறாக புரிந்துகொள்வதற்கென்றே அவதாரம் எடுத்ததுபோல் தவறாக விளங்கிக்கொள்வோர் நிறைய உண்டு.உண்மையில் இவர்களை கண்டு நமக்கு பெரும் பயமுண்டு
ஒரு நாள் பாடம் நடந்துக்கொண்டு இருந்தது.ஆசிரியர் கேட்டார் பிள்ளைகளா நான் நடத்திய பாடம் விளங்கியதா?
தலை ஆட்டினார்கள் மாணவர்கள் ஆம் விளங்கியது என்று;
ஆனால் வெளியில் வந்தபின் மாணவர்களில் பலர் என்ன நடத்தினார் என்றே தெரியவில்லை
என தமக்குள் பேசிக்கொண்டனர்.
இப்படித்தான் வாழ்க்கையிலும் பலர் புரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
திருமணமான புதிதில் சிலருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவும்,கல்லூரியில் சேர்ந்த பின் கண்ணை கட்டுவது போலவும், வியாபாரத்தை ஆரம்பித்தபின் தலை சுற்றுவது போலவும்,முடிவு எடுத்தபின் தடுமாறுவது போலவும் இருக்கும்,தள்ளாடல்களில் பல, இப்படி புரியாமல் போனதின் விளைவே.
சரி என்னதான் செய்வதாம்.
முதலில் புரிதல் பலமானதாக இருக்கவேண்டும்.இரண்டாவதாக செய்வதை புரிந்து இருக்கவேண்டும்.முடிவு எடுத்தபின் செயலில் முன்முயற்சி வேண்டும் பின்வாங்குவது எப்படி என்று யோசிக்க கூடாது

0 comments:
Post a Comment