

நபிகள் நாயகத்தின் பிறந்த தின வரலாற்றை எடுத்து கூறும் நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளி நடை பெற்றுவருகின்றன.
குறிப்பாக இப்படி நிகழ்வுகள் கூடுமா கூடாதா? என்பன கேள்விகளுக்கிடையே அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் வெகுவேகமாகவும் வியாபித்தும் நடைபெற்று வருகிறது.
நபிகள்நாயகம் அவர்கள் உலகமாந்தர்களிடையே ஒரு ஒப்பற்ற நல்லதோர் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள், என்பதை அவர்களின் எதிரிகளேகூட ஒப்புக்கொண்ட உண்மை.
மிக முன்னேறிய- நாகரீக- அறிவுசார்ந்த-தொலைநோக்கு பார்வை கொண்ட-மனித உரிமையின் பாற்பட்ட மாபெரும் அமைப்புக்களும், அரசாங்கங்களும்,அவைகளின் கூட்டுக்கலவையான ஐக்கியநாட்டு சமூகமும், தற்போது மேற்கொண்டுவரும் அனைத்து மனிதகுல நலத்திட்டங்களும் நல்வழிகாட்டுதல்களும் அவற்றில் பெரும்பாலானது, அண்ணலார் அன்றுரைத்த அறவுரை,அறிவுரைகளிலிருந்துதான் என்றால் மிகையில்லை.
இதை அண்ணலாரின் அமுதுரைகளை ஒருமுறை படித்துவிட்டு,பின், தாங்கள் இப்போது மனிதகுலத்திற்காக கடைபிடித்துவரும் திட்டங்களையும் ஒரு ஒப்பீட்டு கண்ணோடு பார்த்தால் தெளிவான சான்றுகள் கிடைக்கும்.
வியர்வை காயுமுன் கூலியை கொடு, சுமைக்கேற்றவாறு தூக்கவிடு, வேலைக்குமுன் கூலியை நிர்ணயம்செய்,என்பன வற்றில் தொழிலாளர் சட்டம் மிளிர்கிறது,
கொள்ளை,பதுக்கல்,உணவு கலப்படம்,உள்நாட்டில் தேவையிருக்க ஏற்றுமதி செய்தல்,பொருட்களின் விலைநிர்ணயம்,பெண்கள் பாதுக்காப்பு முறை,குழந்தைகள் நலம்,சிறுவரை வேலையில் ஈடுபடுத்தாமை,
கட்டாய கல்வி,
இளைஞர் நலம்,
மது,போதைப்பொருள் ஒழிப்பு,
சிறைக்கைதிகள் சீர்திருத்தம்
விபச்சார தடுப்பு
திருமண அவசியம்,
முதியவர்களை காப்பது,
ஏழை எளியவர்க்கு இலவச மருத்துவம்,
இயலாதவர்க்கு உதவி
நலிந்தோர்க்கு வட்டியில்லா கடன் உதவி
திருப்பி செலுத்தவியலாதவர்க்கு கடன் தள்ளுபடி
ஊகபேரத்தடை,
விலைவாசி உயர்வு கட்டுப்பாடு, என மிக நீண்டு வரும்,தற்கால அத்தனை பிரச்சனைகளுக்கும், அண்ணலாரின் அமுத மொழிகளில் ஆதாரம் உள்ளதென்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
நவீனகாலத்து பிரச்சனைகள் இந்த முஹமது நபியவர்களுக்கு எப்படி தோன்றியது என்று நம்மில் பலருக்கு இன்னும் ஆச்சரியம் கூடலாம்.
ஆனால் வியப்பில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் தூதராக இருந்துதான் இக்காரியத்தை செய்தார்கள்,அதனால்தான் பதினைந்து நூற்றாண்டாகியும் அவர்களின் புகழ் மேலோங்கி வருகிறது.
பெயரிலேயே பேர் பெற்ற “புகழப்பெற்றவர்” எனும் பெயர் கொண்டவர்,
உலகம் உள்ளளவும் மனிதகுலம் இன்பம் துய்க்க அவரின் சமாதான வழி, இருகரம் நீட்டி வரவேற்ற வண்ணமாய்
திறந்தே இருக்கிறது.
வாருங்கள் வந்து சுவை காணுங்கள், என்று அவர்தம் வழிநடந்தோர் அழைத்த வண்ணமும் உள்ளனர்.
அன்னியரிடமிருந்து தேசத்தை மீட்டெடுக்க காந்தியடிகள் காட்டிய அஹிம்சாவை, அன்றைய அரபுக்களிடமும் 13 வருடங்களுக்கும் மேலாக
காட்டி, சமூகநீதிக்கும்,சமூகவிடுதலைக்கும் வித்திட்டவர்கள்.
இத்தனை மாற்றங்கள் பெற்றுத்தந்த அண்ணலார் நபிகள் நாயகம்
முஹம்மத் [ஸல்] நபியவர்களின் சரித்திரம், நினைவூட்டல் வழியாக கிடைப்பதாலேயே நாமும் அதை நினைவூட்டிவருகிறோம், என்பதை நினவில் கொண்டால்,
நினைவூட்டல் அவசியம் தானே? ஆம் சீரதுன்நபி ஒரு நினைவூட்டலே.
நபியே உம்மை நினைவு கூர்வதை நாமே மேலேங்க ச்செய்வோம் [அல்குர்ஆன்:94:4]

2 comments:
மாஷா அல்லாஹ் அருமை அருமை,
எம்.கே.கவுஸ்(pno)
மாஷா அல்லாஹ்! அருமை!! அருமை!!!
Post a Comment