எரிபொருள் தீரும் பொருளே அன்றி உற்பத்தியாகும் பொருளல்ல.

உலகில் 2050-ல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்
நன்றி:- தினமணி.

First Published : 13 Mar 2010 06:58:51 AM IST

Last Updated : 13 Mar 2010 10:54:17 AM IST
(ஆயிரம் கார்களில் பவனிவரும் அரசியல் அணிவகுப்புகளும்,தலைவர்களின் பலத்தை நிரூபிக்க,தஞ்சை தள்ளாடட்டும், திண்டுக்கல் திண்டாடட்டும், மதுரையில் மன்றாடட்டும், என்றெல்லாம் போனால்?திண்டாட்டம்தான்,சேமிப்பு என்பது,பணத்தில் மட்டுமல்ல,நம் எரிபொருளிலும்தான்,எருபொருளிலும்தான்.

ஐயா கிருஸ்து தாஸ் நீங்கள் கூறியது தோராய கணக்குதான்,இருக்கும் மக்கள் தொகையில் கட்டுப்பாடு இன்றி விரயம் செய்தால் 2050 அல்ல 2030க்குள் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
*************************************************************


ஒசூர்,​​ மார்ச்​ 12: உல​கம் முழு​வ​தும் 2050-ம் ஆண்டில் பெட்ரோல்,​​ டீசல்,​​ நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை முதன்மை செயலாளர் ஆர்.கிருஸ்துதாஸ் காந்தி கூறினார்.​ ​

​ ​ ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் அவர் பேசியது:

​ நம் கண் முன்னே இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.​ 2050-ல் பெட்ரோல் டீசல்,​​ நிலக்கரி ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு வரும்.​ ​

இவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது காற்று மாசுபடுகிறது.​ ஆனால் ​ நீர்,காற்று,​​ சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது எத்தகைய பாதிப்பும் இயற்கைக்கு ஏற்படுவதில்லை.

மேற்கு ஜெர்மெனியில் மொத்த மின்உற்பத்தியில் 8 சதவீதம் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.​ ஆனால் தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தியில் 30 சதவிகிதம் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.​ உலகில் வேறு எங்கும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் சூரியஒளி மூலம் அதிக அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும்.​ ஆண்டுக்கு 300 நாள்கள் சூரியஒளியை நாம் முழுமையாக பெறுவதே இதற்கு காரணம்.​ ஆனால் சூரியஒளி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.15 கோடி முதலீடு தேவைப்படுகிறது.

போட்டோசெல் மூலம் சூரியக் கதிர்களை மின்சாரமாக மாற்றும் முறை தற்போது உள்ளது.​ இந்த போட்டோ செல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் நமக்கு அதிக செலவாகிறது.

​ ​ எனவே இவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்ய மாணவர்கள் புதிய உத்திகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

​ ​ ​ ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத்,​​ பேராசிரியர்கள் அறிவுடைநம்பி,​​ ஷியாம்சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments:

நட்புக்கு இலக்கணம்

என்னை பற்றி

My Photo
DUBAI, DUBAI, United Arab Emirates
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Fish

My Blog List

5