மாத்துனா சாத்துதான்

நன்றி தினத்தந்தி MARCH 16 2010

காலநிலை மாற்றத்தால்
இந்தியாவில் உணவு&தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
கருத்தரங்கில் தகவல்


கோவை,மார்ச்.16&
காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு&தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கருத்தரங்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் மற்றும் வாழ்வியல் அறிவியல் துறை சார்பில் Ôகாலநிலை மாற்றத்தால் பூச்சி இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புÕ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் சசிகலா வரவேற்றார். பதிவாளர் திருமால்வளவன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக வனமரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&
நம் நாட்டில் 400&க்கும் மேற்பட்ட சிறு செடியினங்களும், 57 ஆயிரம் வவையான பூச்சி இனங்களும் உள்ளன. இவை மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக அரியவகை பூச்சி இனங்களும், தாவர இனங்களும் அழிந்து வருகின்றன.
மக்கள் தொகை பெருக்கம்
வண்ணத்து பூச்சி இனங்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டன. இதில் பெரும்பாலான இனங்கள் அழிந்து விட்டன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தாவரங்கள் மற்றும் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டியது அவசியம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பூச்சி இனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. செடிகளில் உள்ள பூக்களின் மகரந்த துகள்களை ஒரு தாவரத்தில் இருந்து மற்றொரு தாவரத்துக்கு கொண்டு செல்லும் பணியை பூச்சிகள் செய்து வருகின்றன. பூச்சி இனங்கள் குறைவதால், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில், மக்கள் தொகை பெருக்கமும் ஒரு பிரச்சினையாக உருவாகி வருகிறது.
மேலாண்மை முறைகள்
காலநிலை மாற்றத்தால் தாவரங்கள் மற்றும் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாலும், மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், சில ஆண்டுகளில் இந்தியாவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கவும், அழிந்து வரும் தாவரம் மற்றும் பூச்சி இனங்களை பாதுகாக்கவும், ஒருங்கிணைந்த தாவர மற்றும் பூச்சி மேலாண்மை முறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணகுமார் கூறினார்.
கருத்தரங்கில், பேராசிரியர் முருகன், இயக்குனர் மணியன், Ôவேம்பில் இந்தியாவின் பசுமைÕ திட்ட இயக்குனர் பெரின் எஸ்.பிட்டர் அமெரிக்கா செயின்ட் ஒலாப் கல்லூரி பேராசிரியர்கள் ஆன் வால்டர் மற்றும் மைக்கேல் ஸ்விப்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

0 comments:

நட்புக்கு இலக்கணம்

என்னை பற்றி

My Photo
DUBAI, DUBAI, United Arab Emirates
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Fish

My Blog List

5