"தாயில்லாமல் நானில்லை"தாயே தெய்வம்"குடியிருந்த கோயில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே"தாயை தெய்வமாக வணங்குவது என்பன போன்றதெல்லாம் தாய்க்கு எவ்வகையிலும் பிரயோஜனமில்லை.மாறாக அவர் வாழும்வரை தேவைபடும் வாழ்வாதாரங்களான உணவு,உடை,இருப்பிடம்,மருத்துவம்,உடலுதவி,துணை,இதுவே தாய்க்கு செய்யும் பணிவிடையும் மகன் செய்யும் கடன் பணியுமாகும்,வணங்குவதெல்லாம் இறைவனுக்கு செய்யவேண்டியவையே தாய்க்கு அல்ல.தாய்க்கு பணிவிடையே அவசியம்
வணங்கவேண்டியனை வணங்குங்கள், ஆனால் வழங்கவேண்டியவைகளை வழங்குங்கள்.ஆர்.
***********************************************************************
நன்றி நன்றி நன்றி > -:தினமணி:-
First Published : 10 May 2010 01:15:32 AM IST
புது தில்லி, மே 9: அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வேளையில் அன்னையர் நலத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது.
அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் 77 நாடுகள் கொண்ட பட்டியலை "சேவ் தி சில்ட்ரன்' என்ற குழந்தைகள் நல உரிமை அமைப்பு அன்னையர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தைப் பிடித்து பின்தங்கியுள்ளது. கென்யா, காங்கோ போன்ற சிறிய நாடுகளில் கூட அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ அன்னையர் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் 77 நாடுகள் கொண்ட பட்டியலில் கியூபா முதலிடம் வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஆர்ஜென்டினா, பார்படோஸ், தென் கொரியா, சைப்ரஸ், உருகுவே, கஜகஸ்தான், பஹாமாஸ், மங்கோலியா நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
பக்கத்து நாடுகளான சீனா 18-வது இடத்தையும், இலங்கை 40-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் இந்தியாவை விட பின்தங்கி 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.
குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளின் வரிசையில் வங்கதேசம் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அன்னையர் நலத்துக்கு முக்கியத்துவம் தரும் மொத்தம் 166 நாடுகள் கொண்ட பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தையும், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவில் சுகாதார நலம் மோசமாக இருப்பதற்குக் காரணம் பயிற்சி பெற்ற சுகாதார நல ஊழியர்கள் இல்லாததுதான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அரசு திட்டமிட்டுள்ளபடி 1,000 பேருக்கு ஒரு சுகாதார நலத்துறை ஊழியர் (ஆஷா பணியாளர்கள்) இந்தியாவில் இருக்கவேண்டும். 5 ஆயிரம் பேருக்கு ஒரு செவிலியர் இருக்கவேண்டும். ஆனால் இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற சமுக நல ஆர்வலர்களின் (ஆஷா பணியாளர்கள்) எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதைப் போலவே அங்கீகாரம் பெற்ற செவிலியர்களும் குறைவாக உள்ளனர். சுமார் 21 ஆயிரம் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.
இதுகுறித்து "சேவ் தி சில்ட்ரன்' அமைப்பின் இயக்குநர் ஷிரீன் வகீல் மில்லர் கூறியதாவது: தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும்போதும் நாட்டில் செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
நாட்டில் ஆண்டுதோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 19.5 லட்சம் பேர் இறக்கின்றனர். உலகிலேயே இங்குதான் இந்த இறப்பு விகிதம் அதிகம்.
அதைப் போல குழந்தைப் பிறப்பு மற்றும் கர்ப்ப காலத்தின்போது ஆண்டுதோறும் இந்தியாவில் 67 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர். திறமையான சுகாதார ஊழியர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
சரியான மருத்துவ சிகிச்சை பெற்றால் இறக்கும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 63 சதவீதம் பேரைக் காப்பாற்றிவிடலாம்.
அதைப் போலவே ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும், உடல் நலம் குன்றிய குழந்தையும் டாக்டர்களைப் பார்த்து சிகிச்சை பெற்றால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் கிராமப்புற பகுதிகளில் இது சாத்தியம் இல்லை என்றார் அவர்.
நம்மை கடந்து போகும் யாவும் நமக்கொரு செய்தியை தந்தே செல்கிறது. நாம்தான் அதிலிலிருந்து பாடம் கற்பதில்லை.விலங்குகள் ஒன்றை ஒன்று கடக்கையில் எதையும் கற்பதில்லை.<> சோம்பேறிகள் என்று யாருமில்லை, முடிவெடுத்துவிட்டால் அவனை விட சோம்பேறி யாருமில்லை. எண்ணத்தை அழகாக்கு, எண்ணியதை எழுத்தாக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
என்னை பற்றி
- நண்பன்
- DUBAI, DUBAI, United Arab Emirates
- சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.
0 comments:
Post a Comment