இந்திய மக்களின் உயிரும் - நீதியும் விலை குறைவு

First Published : 08 Jun 2010 12:00:00 AM IST DINAMANI [courtesy]
நன்றி - தினமணி:-
1984, டிசம்பர் 2 நள்ளிரவு, டிச.3 அதிகாலை:
யூனியன் கார்பைடு இந்தியா ஆலையிலிருந்து நச்சுவாயு மீதைல் ஐசோசயனைடு வெளியேறல். 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு; 5 லட்சம் பேர் பாதிப்பு.
டிசம்பர் 4: நிறுவனத் தலைவர் வாரென் ஆண்டர்சன் உள்ளிட்ட 9 பேர் கைது. ஆனால் 2,000 டாலர் ஜாமீன் தொகை கட்டி, மீண்டும் இந்தியா வருவதாகக் கூறி அமெரிக்கா சென்றார் வாரென் ஆண்டர்சன், ஆனால் அவர் வரவேயில்லை. 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு நிறுவனம் சேர்ப்பு.
1985, பிப்ரவரி: அமெரிக்க நீதிமன்றத்தில் 330 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு.
1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்தியாவுக்கு மாற்றல்.
1987, டிசம்பர்: வாரென் ஆண்டர்சன் மற்றும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு. பெருமளவு மக்கள் படுகொலைக்குக் காரணமானதற்காக ஆண்டர்சனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
1989, பிப்ரவரி: இந்திய அரசுடன் யூனியன்
கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச உடன்படிக்கை செய்தது. இதன்படி 43 கோடி டாலர் இழப்பீட்டை யூனியன் கார்பைடு அளித்தது.
1989, பிப்ரவரி-மார்ச்: மிகக் குறைவான இழப்பீட்டைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல்.
1992: இழப்பீட்டுத் தொகையான 43 கோடி டாலரில் பகுதியளவு போபால் மக்களுக்கு வழங்கப்பட்டது.
1992, பிப்ரவரி: நீதிமன்ற நோட்டீûஸ புறக்கணித்ததாக வாரென் ஆண்டர்சன் மீது குற்றச்சாட்டு.
1994, நவம்பர்: வாயுக் கசிவில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த போதிலும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குகளை கோல்கத்தாவைச் சேர்ந்த மெக்லாய்ட் ரஸ்ஸல் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு விற்க அனுமதி.
1996, செப்டம்பர்: இந்திய அதிகாரிகளுக்கெதிரான வழக்கின் தீவிரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்தது.
1999, ஆகஸ்ட்: யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டதாக அறிவிப்பு.
1999, நவம்பர்: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தொண்டு நிறுவனம் கிரீன் பீஸ் அமைப்பினர் இப்பகுதியில் நிலம் மற்றும் தண்ணீரை சோதித்ததில் பல்வேறு நச்சு ரசாயனப் பொருள் மற்றும் பாதரசத்தின் அளவு வழக்கத்தைவிட 60 லட்சம் மடங்கு அதிகம் இருப்பதாக சோதனையில் கண்டறிந்தனர்.
1999, நவம்பர்: விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்தோர்,யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் தலைவர் வாரென் ஆண்டர்சனுக்கு எதிராகவும் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் குற்ற வழக்குப் பதிவு.
2001, பிப்ரவரி: இந்தியாவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் நேர்ந்த வாயுக் கசிவுக்கு பொறுப்பேற்க அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகம் மறுப்பு.
2002, ஜனவரி: சிருஷ்டி என்ற அமைப்பு நடத்திய சோதனையில் இப்பகுதியில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் பாதரசம் மற்றும் காரீய அளவு அதிகமாக இருப்பதை சோதனை மூலம் கண்டறிந்தது.
2002, ஜூன்: வாரென் ஆண்டர்சனுக்கு எதிரான வழக்கை மத்திய அரசு கைவிடப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2002, ஆகஸ்ட்: வாரென் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே வாரென் ஆண்டர்சனைக் காணவில்லை என அமெரிக்கா தெரிவித்த நிலையில் அவர் நியூயார்க்கில் இருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
2002, அக்டோபர்: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை சுத்தப்படுத்த கடும் எதிர்ப்பு. அதில் மேலும் பல ஆயிரம் டன் நச்சுக் கழிவுகள் இருப்பதாக புகார்.
2003, மே: வாரென் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை.
2004, மார்ச்: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை இந்திய அரசு அனுமதித்தால் சுத்தப்படுத்தித் தரலாம் என்று டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
2004, ஜூன்: இந்திய அரசிடம் வாரென் ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு. இருதரப்பு ஒப்பந்தத்தில், குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்து ஒப்பந்தத்தில் சில பிரிவுகள் வாரென் ஆண்டர்சனை ஒப்படைப்தற்கான வரையறைக்குள் வரவில்லை என தெரிவித்தது.
2004, ஜூலை 19: ஏற்கெனவே ஒப்புக்கொண்ட 47 கோடி டாலர் இழப்பீட்டைத் தவிர ரூ. 15 கோடி கூடுதலாக தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. 1992-ம் ஆண்டிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்கிய 47 கோடி டாலரை வைத்தருந்ததற்கு வட்டியாக இத்தொகையை வழங்க உத்தரவு.
2004, அக்டோபர் 25: இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
2004, அக்டோபர் 26: யூனியன் கார்பைடு நிறுவனம் அளித்த 47 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையை நவம்பர் 15-க்குள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
2010, ஜூன் 7: வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளித் துதீர்ப்பு: நன்றி தினமணி

0 comments:

நட்புக்கு இலக்கணம்

என்னை பற்றி

My Photo
DUBAI, DUBAI, United Arab Emirates
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Fish

My Blog List

5