நன்றி:- தினமணி
[ கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையே சற்று மாறி "நிலம் விற்று வளம் வாங்குகிறோம்.முடியுமா? படிக்க மட்டுமல்ல படிப்பிணைக்காகவும் ]
விவசாயத்தைக் காப்பாற்ற சிந்தனைக் குழுக்களை உருவாக்க வேண்டும்: ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி
First Published : 06 Jul 2010 02:18:32 AM IST
Last Updated :
திருச்சி, ஜூலை 5: விவசாயத்தைக் காப்பாற்ற சிந்தனைக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றார் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.
÷கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், திருச்சியில் உழவர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் உழவர் தினப் பேரணி மற்றும் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:
÷நமது நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயம் நன்றாக இருந்தது. நாட்டின் வருமானத்தில் 60 சதவீதம் விவசாயத்தின் மூலமாகக் கிடைத்தது.
÷ஆனால், இன்றைக்கு நாட்டின் மொத்த வருமானத்தில் 11.4 சதவீதம்தான் விவசாயம் மூலம் கிடைக்கிறது. இதை விவசாயத்தின் வீழ்ச்சி என்றுதான் கூற வேண்டும்.
÷அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்தினரும், பிரான்ஸில் 9 முதல் 10 சதவீதத்தினரும், மேற்கத்திய நாடுகளில் 2 முதல் 3 சதவீதத்தினரும் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நாட்டில் விவசாயிகளற்ற விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், நமது நாட்டில் விவசாயிகள் மூலம்தான் விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
÷விவசாயத்தைப் பற்றி பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் மூலமாக புரிந்து கொள்ள முடியாது. இன்றைய நிலையில் 100 கி.மீ. இடைவெளிக்குள் விவசாயம் வேறுபடுகிறது. விவசாய நிலமும், அதன் குணமும் வேறுபடுகிறது.
÷நமது நாட்டில் இன்றைக்கு 2 லட்சம் நெல் ரகங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமான விவசாயம் நமது நாட்டில் இல்லை. விவசாயிகளின் பிரச்னையை விவசாயிகளால்தான் தெரிந்து கொள்ள முடியும்.
÷விவசாயப் பிரச்னை பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, கலாசாரம், சமூகவியல், ஆன்மிகம், பாரம்பரியம் சம்பந்தப்பட்டதாகும்.
÷நமது நாட்டின் நிலப் பரப்பை விட அமெரிக்க, சீன நாடுகள் மூன்றரை மடங்கு அதிகம் நிலப் பரப்பு கொண்டவையாகும். ஆனால், நமது நாட்டில் உள்ள நிலப் பரப்பைக் கொண்டு 16 கோடி ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியும்.
÷நிலப் பரப்பு பெரியதாக இருந்தாலும் சீனாவில் 10 கோடி ஹெக்டேரில்தான் விவசாயம் செய்ய முடியும். நமது நாட்டில் உள்ள விளைநிலங்களில் சரியாகப் பயிரிட்டால் ஆசிய கண்டத்துக்கே நம்மால் உணவை வழங்க முடியும்.
÷நமக்குத் தெரிந்த விஷயத்தை படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எல்லோரிடம் எடுத்துரைத்து சிந்தனைக் குழுக்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் விவசாயத்தைவிட நமக்குத்தான் அதிக பாதிப்பாகும்.
÷உலகின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்டது நமது நாடு. நம் நாட்டின் உணவுத் தேவையை நம்மால்தான் நிறைவு செய்ய முடியும், உலகில் நிம்மதி ஏற்பட வேண்டும் எனில் பாரத நாடு தன்னிறைவு பெற்றாக வேண்டும். அது உணவில் மட்டுமல்ல, பருப்பு வகைகள், காய்கறிகள் என எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற வேண்டும்.
÷ரசாயனம் மூலம் விவசாயம் செய்வதால் பெரிய ஆபத்து ஏற்பட உள்ளது. பாரம்பரிய விவசாயத்தைதான் மேற்கொள்ள வேண்டும்.÷போராட்டம், ஆர்ப்பாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், சிந்தனை செய்யக்கூடிய குழுக்களை விவசாயிகள் உருவாக்க வேண்டும். இந்த வேலையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு விடாமல் செய்வேன் என உறுதியேற்க வேண்டும்.
÷விவசாயத்தில் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளது. அதற்குரிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது என்றார் குருமூர்த்தி.
நம்மை கடந்து போகும் யாவும் நமக்கொரு செய்தியை தந்தே செல்கிறது. நாம்தான் அதிலிலிருந்து பாடம் கற்பதில்லை.விலங்குகள் ஒன்றை ஒன்று கடக்கையில் எதையும் கற்பதில்லை.<> சோம்பேறிகள் என்று யாருமில்லை, முடிவெடுத்துவிட்டால் அவனை விட சோம்பேறி யாருமில்லை. எண்ணத்தை அழகாக்கு, எண்ணியதை எழுத்தாக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
என்னை பற்றி
- நண்பன்
- DUBAI, DUBAI, United Arab Emirates
- சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.
0 comments:
Post a Comment