ஊழலின் ஊற்றுக்கண்

ஊழலின் ஊற்றுக்கண் இந்தியா என்பது போன்ற ஒரு தோற்றத்தை வெளிநாட்டினருக்கு நம் ஆள்வோர்கள் ஏற்படுத்திவிட்டனர்.
ஆம் பிறகென்ன?

தோண்டத்தோண்ட மண் அள்ள ஊழல் கர்நாடகாவில்.
அலைகற்றையோ அலை அலையாய் ஊழல் அலை.
காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் விலையாடுகிறது.
அடுக்குமாடி வீட்டில் அடுக்கடுக்காய் ஊழல்.
இஸ்ரோவிலும் எஸ்.பாண்டு ஊழலாம் வின்வெளியில் பறக்கிறது ஊழல்.
ஒற்றை வரியில் சொல்வதென்றால் கடவுள் போல் வியாபித்திருக்கும் ஊழல் என்று தினமணி தலையங்கத்தில் சொல்லியது கல்லில் செதுக்கும் வார்த்தை.
ஊழலை ஒழிக்கவே ஒரு தனிதுறை அமைச்சர் போடலாம் நல்ல யோசனைதான். அதில் ஊழல் முளைத்தால் என்ன பண்ணுவது என்று ஒரு தயக்கம் இருக்கலாம்.

அதிகபட்ச ஏழைகளை கொண்டிருக்கும் நாடு,அரசியல்வாதிகள் முதற்கொண்டு,ஆன்மீகவாதிகள் வரை, அதிகாரிகள் முதல் கவுன்சிலர்வரை இந்த அளவுக்கு ஊழல் செய்தும்,எல்லாதுறைகளும், ஊழலில் ஊறியும்,நாறியும்கூட இந்தியா தாக்குபிடிக்கற தென்றால்? ஆச்சரியத்தில் விளிம்பில் உள்ளனர், உலக அரசியல் நோக்கர்கள்.இது சம்பந்தமான கட்டுரைகளை தேடிப்பிடித்து படிக்கும்போதும் இன்னும் ஆச்சரியம் ஊட்டும் சங்கதிகளும் கிடைக்கத்தான் செய்கிறது,
ஊழலை ஒழிக்க வேண்டுமானால். ஊடகங்கள் - தொண்டு நிறுவனங்கள்- பொதுமக்கள் என்று முத்தரப்பு ஒத்துழைப்போடு ஜனநாயகம் வழங்கிய அனைத்து வழிகளிலும், செயல்பட்டால் நிச்சயம் ஒழித்துவிடலாம்,அல்லது வெகுவாக குறைத்துவிடலாம்.அன்று வெள்ளையன் கொள்ளையடித்தான், இன்றோ? நம்மவன் கொள்ளையடிக்கின்றனர்.இவற்றையெல்லாம் தாங்கி நம்பாரதமாதா வீறுநடை போடுகிறாள் என்றால் அது நிச்சயம் இந்த நாட்டை கடவுள் நேசிக்கிறார் என்றுதான் அர்த்தம்,அது எந்த கடவுள்? என்றெல்லாம் மூக்கை நுழைக்கவேண்டாம்,எந்தக்கடவுளாவாது இருந்து விட்டு போகட்டும், ஊழல் சம்பந்தமான சில குறிப்புகள்: - எல்லாம் அதுவாம் இதுவாம் வகைகள்.என்றாலும் அதுமட்டும் அல்லவாம்.

இந்த ஊழல் - கருப்புப்பணத்தில்.

1) இந்தியாவின் மொத்தக்கடனை அடைத்துவிடலாமாம்.
2) மொத்தக்கடனையும் அடைத்துவிட்டு ஆளுக்கொரு ஐந்தாயிரம் இந்த பிடி என்றும்
சொல்லலாமாம்.
3) வளர்ந்த அரபுகள் நாடுகள் போல் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை/வசிக்கும்
கட்டிடம்/தண்ணீர்/மின்சாரம்/மருத்துவம்/கல்வி/சுகாதாரம்/தனிநபர் வருமாணம்
ஆகியவற்றில் அரபுநாடுகளுக்கு நிகராக நாம் இருக்கலாமாம்.
4) ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நம்புராணத்தை(அந்தப்புராணம் அல்ல)பாட
ஆரம்பித்துவிடுவார்களாம்,
5) தென்கிழக்காசியாவில் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக ஆகிவிடுவோமாம்.
6) வேலையில்லா திண்டாட்டம் காணாமல் போய்,ஆசியாவிற்கே வேலை கொடுக்கும்
சக்தியாக மாறிவிடுமாம்,(சாரி அந்த "சக்தி" அல்ல)
7) தென்கிழக்காசியாவின் வணிக மையமாகவும்,ஆசியாவின் வணிக சந்தையாகவும்
விடுமாம்.
8) எல்லாவற்றையும் மீறி, ஐ.நா. அங்கீகரித்தே ஆகவேண்டிய "வல்லரசு"பட்டம்
கிடைத்துவிடுமாம்.
9) பாலும் தேணும் ஓடும் நம்பாரதத் திருநாடு என்று பாரதி கண்ட தேசமாக உண்மையில்
மாறுமாம்,
10)தேசத்தின் தனிப்பெரும் வளமை கொண்ட கௌரவம் உலக அரங்கில் தலைநிமிருமாம்.
பி.கு. சரி இதெல்லாம் நம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்காத வகையில் செய்யும்
தேசப்பற்றாளர்கள்
யார்? நாம் தேர்ந்தெடுக்கும்ம் அரசியல்வாதிகள். அவர்கள் நியமிக்கும் அதிகாரிகள்.

0 comments:

நட்புக்கு இலக்கணம்

என்னை பற்றி

My Photo
DUBAI, DUBAI, United Arab Emirates
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.பிறரிடம் கற்கவேண்டியதோ ஏராளம்.நடமாடும் அறிவுக்களஞ்சியமாய் என் முன் நடமாடும் அத்துனை மனிதர்களையும் மதிக்கிறேன்,அவர்களினின்றும் பாடம் கற்கிறேன்.இதோ கீழிருக்கும் மீன்கள் உணவு தேடி அலைகிறது என்பதும் ,இல்லை, விஷயம் தேடி அலைகிறது என்பதும், அவரவர் அறிவு சார்ந்த விஷயத்திற்கே விட்டு விடுகின்றேன்.

Fish

My Blog List

5